பக்கம் எண் :

242

தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து திருமருகல் செல்ல நகரப்
பேருந்துகள் உள்ளன.

     இறைவரின் திருப்பெயர் மாணிக்கவண்ணர். இறைவியாரின் திருப்பெயர்
வண்டுவார்குழலி.

     தலவிருட்சம் வாழை.

     திருமருகலுக்கு அருகிலுள்ள வைப்பூர் என்னும் ஊரில் தாமன் என்னும்
வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஏழு பெண்கள். ஆனால் மூத்த
மகளை அவ்வணிகன் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான்.
பணம்பெற்று வேறு ஒருவனுக்குக் கொடுத்து விட்டான். இங்ஙனமே ஏனைய
ஐந்து பெண்களையும் மணஞ்செய்து கொடுத்துவிட்டான். ஏழாவது பெண்
உளம் தளர்ந்து தாய் தந்தையருக்குத் தெரியாமல் மருமகனோடு உடன் வந்து
விட்டாள். வந்தவர்கள் மருகல் பெருமான் கோயிலின் பக்கத்தில் ஒரு
மடத்தில் தூங்கினார்கள்.

     அதுபொழுது அம்மருமகன் அரவு தீண்டப்பெற்று ஆவி நீங்கும்
தன்மையைக் கண்ட அப்பெண் அயர்ந்து சிவனருளையே சிந்தித்துப்
புலம்பினாள். அப்புலம்பலைக் கேட்டு அங்கு முன்னரே எழுந்தருளியிருந்த
ஞானசம்பந்தப் பெருந்தகையார் செய்தியை அறிந்து “சடையா யெனுமால்”
என்று தொடங்கும் பதிகம் பாடி அம்மருமகனை உயிர்ப்பித்து
அவ்விருவர்க்கும் மணத்தை முடித்து வைத்தருளினார்.

     இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு
நாயனார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் உள்ளன. இப்பதிக்குரிய
ஞானசம்பந்தர் பதிகங்கள் இரண்டனுள் “அங்கமும் வேதமும்” என்று
தொடங்கும் பதிகம் திருமருகலையும் திருச்செங்காட்டங்குடியையும் சேர்த்துப்
பாடியதாகும்.

கல்வெட்டு:

     இக்கோயிலின் கீழைக்கோபுரம் 5 நிலைகளும் 68 அடிஉயரமும்
உள்ளது. இக்கோயில் 75 மீ. X 55 மீ. அளவுள்ள அறையினைக் கொண்டது.
முன்னிலையில் 55 மீ. X 48 மீ. அளவுள்ள தெப்பக்குளம் ஒன்றுள்ளது.
இக்கோயிலின் கீழைக்கோபுரத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அது புதியது.
சகம் 1617 தஞ்சை மராட்டிய