|
கல்வெட்டு:
இக்
கோயிலில் ஏழு கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.
பரகேசரி, இராசகேசரி, சோழர்களில் நான்கும், பாண்டியர்களில் மூன்றும்
ஆக ஏழு ஆகும். அவை கோயிலுக்கு நிலதானம் விளக்குகளுக்கு
நிலதானம், இவைகளைக் குறித்தவைகளாக இருக்கின்றன. பதின்மூன்றாம்
ஆண்டுத் தொடக் கத்திலேயே பாண்டியராட்சி இங்கேவந்துவிட்டது.
இடைக்காலச் சோழர்களின் கல்வெட்டுக்கள் தெரியவில்லை.
79.
திருமுதுகுன்றம்
சிவபெருமானால்
முதலில் படைக்கப்பெற்றது ஆதலின் இப்பெயர்
எய்திற்று. இது விருத்தாசலம், என்றும் வழங்கப்பெறும்.
இது விழுப்புரம்
- திருச்சிராப்பள்ளி தொடர் வண்டிக் குறுக்கு
வழியில் விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்திற்குச் சுமார் 1.5. கி. மீ.
தூரத்தில் இருக்கின்றது. சிதம்பரத்திலிருந்தும் சேலத்திலிருந்தும்
விருத்தாசலம் செல்லப் பேருந்துகள் உள்ளன. இது நடுநாட்டுத் தலங்களுள்
ஒன்று.
இறைவர்
திருப்பெயர் பழமலைநாதர். இறைவி திருப்பெயர்
பெரியநாயகி.
தலவிருட்சம்
வன்னி.
தீர்த்தம்:
மணிமுத்தாறு.
திருஞானசம்பந்தப்
பெருந்தகையார் இத்தலத்தை அடையும்
போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித் தனிப் பதிகங்கள்
பாடியருளிய பெருமையை உடையது.
இங்கு
இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால்
வீசி இளைப்பாற்ற, சிவபெருமான் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத்
தமது உருவமாக்கும் திருப்பதி ஆதலால் இது காசியினும் மேம்பட்டதாகும்.
சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இறைவனைப்பாடிப் பன்னீராயிரம்
|