பக்கம் எண் :

254

     பழுதுபட்டிருந்த இந்தக் கோயிலைத் தேவகோட்டையார் திருப்பணி
செய்துள்ளனர். 4-5-1922 ல் இக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடந்தது.
கல்தூண்களில் புராண வரலாறுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

கல்வெட்டு:

     இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன.
அவையெல்லாம் சோழர்களின் கல் வெட்டுக்களே, பரகேசரிவர்மன்
கல்வெட்டில் உறையூர் திருவுடைத்தலைப் பெருமாளுக்கு நித்திய
பூசைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இராஜேந்திரன் காலத்தில்
அதிகுண கற்பகநல்லூர் இக்கோயிலுக்குத் தரப்பட்டது.

                     82. திருவலஞ்சுழி

     பிலத்தினுள் சென்றுவிட்ட காவிரிவெளிப்படும் பொருட்டு
ஏரண்ட முனிவர் பிலத்தினுள் இறங்க, காவிரி வெளிவந்து வலமாகச்
சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால் இப்பெயர் பெற்றது.

     இது கும்பகோணம்-தஞ்சாவூர் தொடர் வண்டிப் பாதையில்,
சுவாமிமலை தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே3/4 கி. மீ. தூரத்தில்
இருக்கின்றது. இது காவிரியின் தென்கரைத் தலங்களுள் 25ஆவது ஆகும்.
கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

     இறைவர் கற்பகநாதேசுரர். இறைவியார் பெரியநாயகி.

     தீர்த்தம்: காவிரி.

     அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக்
கடைந்தபொழுது பூசித்த வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இங்குக்
கொண்டுவந்து எழுந்தருளுவித்து வழிபட்டான்.

     வெள்ளைப் பிள்ளையார் கோயில் மிகவும் வேலைப்பாடுடையது.
இக்கோயிலில் ஏரண்ட முனிவரின் பிரதிமையும், பக்கத்தில் வலஞ்சுழி
நாதர் என்னும் சிவலிங்கத் திருமேனியும் இருக்கின்றன. இத்தலத்திற்குத்
திருஞானசம்பந்தர் பதிகங்கள் மூன்று, திருநாவுக்கரசு நாயனார் பதிகம்
ஒன்று ஆக நான்கு பதிகங்கள்