பக்கம் எண் :

253

     சோழநாடு, நாகை மாவட்டம், சீகாழி வட்டம், கோயிலின் வாயில்
கிழக்குப் புறத்திலுள்ளது. கல்லாலான திருப்பணி. அம்மனுக்குத்
தனிப்பிராகாரமுண்டு.

     கோயிலுக்கும் கடற்கரைக்கும் இடையில் சிந்தனைப் பிள்ளையார்
கோயில் ஒன்று இருக்கின்றது. வடக்கே நந்தகோபால தீர்த்தம் என்ற குளம்
இருக்கிறது.

81. திருமூக்கீச்சுரம் (உறையூர்)

     திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே2 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இது
காவிரியின் தென்கரைத் தலங்களில் ஐந்தாவது ஆகும். திருச்சிராப்பள்ளி
பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் செல்ல நகரப் பேருந்துகள் பல
உள்ளன. இது உறையூரிலுள்ள திருக்கோயிலாகும்.

     இறைவர் பஞ்சவர்ணேசுவரர். இறைவியார் காந்திமதியம்மை.

     தலவிரும் வில்வம்.

     தீர்த்தம் சிவதீர்த்தம்.

     இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்த திருப்பதி. தமிழ் நாட்டு
மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி. உதங்க முனிவர்க்குச் சிவ பெருமான்
ஐந்து காலங்களில் ஐந்து வர்ணமாகக் காட்சியளித்த தலம். கத்துருவின்
மகன் கார்க்கோடகன் வந்து பூசித்துப் பேறுபெற்றான். வேதச் சுருதி
என்னும் அந்தணன் பூசித்துப் பேயுரு நீங்கப்பெற்றான்.

     வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது
யானையைக் கோழி வென்றமையால் இத்தலத்தி்ற்குக் கோழியூர் என்ற வேறு
பெயரும் உண்டு. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.

     திருசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதற்குத்
தலபுராணம் எழுதியுள்ளார்கள். அது அச்சில் வெளிவந்துள்ளது. உறையூர்க்
காந்திமதியம்மை பிள்ளைத் தமிழையும் அவர் செய்திருக்கிறார். இன்னும்
பல பிரபந்தங்கள் இக்கோயிலுக்கு உண்டு.