பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)81. திருத் தோணிபுரம்1005

3669. சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ
       றாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு
     பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை
     யண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர்
     தோணிபுர மாமே.                    2

3670. வண்டரவுகொன்றைவளர் புன்சடையின்
       மேன்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர
     மேட்டிபழி தீரக்


     2. பொ-ரை: சல்லரி, யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம்
முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பெரிய மலையாகிய இமயமலையரசரின்
அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகப்
பிரியாமல் கொண்டு, கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற,
சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம்,
சொல்லுதற்குரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ்
வளரும் திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: சல்லரி - யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் முதலிய
வாத்தியங்கள் ஒலிக்க என்பது முதலடியின் கருத்து. மா-பெரிய. கல்மலையர்
அரிய பாவை - இமயமலையினர் தம் அரிய புதல்வியாகிய உமாதேவியாரை.
ஒரு பாகம் நிலைசெய்து - ஒரு பாகமாக நீங்காமற் கொண்டு. கை எரி ஏந்தி
- கையில் அனலையேந்தி. அல் - இரவில். நடம் ஆடு - கூத்தாடுகின்ற.
(சடை அண்ணல் இடம் என்பர்) வளர் - ஊழிதோறூழியர்கின்ற
தோணிபுரத்தை. ஆம் - அசை "மேயவிவ்வுரைகொண்டு விரும்பும் ஆம் -
ஆயசீர் அநபாயன் அரசவை" என்புழிப்போல (தி.12 பெரிய புராணம்)
தோணிபுரம் இடம் ஆம் என்பர் எனினும் ஆம்.

     3. பொ-ரை: வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர்
மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து,
பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய