பக்கம் எண் :

1006திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கண்டரவ வொண்கடலி னஞ்சமமு
     துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு
     தோணிபுர மாமே.                     3

3671. கொல்லைவிடை யேறுடைய கோவணவ
       னாவணவு மாலை
ஒல்லையுடை யானடைய லாரரண
     மொள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி
     மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய்
     தோணிபுர மாமே.                     4


மேலான இடத்திலுள்ள சிவபெருமான், திருமால் முதலியோர் தனது
அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு,
திருவருள் செய்து, அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த
பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய்
வீற்றிருந்தருளும் ஊர், திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்
செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: வண்டு - வண்டினம். அரவு - மோதி ஊதுகின்ற. கொன்றை
(மாலையோடு) வளர் - வளர்கின்ற (புன்) சடையின் மேல் - சடையின்மேல்.
மதியம் - பிறைச்சந்திரனை, வைத்து. அரவு - பாம்பை. பண்டு -
அக்காலந்தொட்டு. தன் அரையில், ஆர்த்த - அரைஞாணாகக்கட்டிய.
பரமேட்டி - மேலான இடத்திலிருப்பவனும். பழிதீர - (திருமால் முதலியோர்
இறைவனாணையின்றிக் கடல் கடையச் சென்ற) தோடம் அவரைவிட்டு
நீங்குமாறு. கண்டு - தெரிந்து. அரவம் - ஆரவாரத்தையுடைய. ஒண் கடலின்
- சிறந்த பாற்கடலில் எழுந்த. நஞ்சம் அமுது உண்ட கடவுள். ஊர் -
ஊராவது. தொண்டர் அவர் - அத்தகைய பேரன்பு படைத்த அடியார்கள்.
மிண்டி - ஒருவர் ஒருவரின் நெருங்கி. வழிபாடுமல்கு - வழிபடும்
வழிபாடுகள் மிகுந்த. தோணிபுரம் ஆமே.

     4. பொ-ரை: சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடபவாகனத்தை
யுடையவன். கோவண ஆடை அணிந்தவன். அடிய