பக்கம் எண் :

1042திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3711. போதியல் பொழிலணி புறவநன் னகருறை
       புனிதனை
வேதிய ரதிபதி மிகுதலை தமிழ்கெழு
     விரகினன்
ஓதிய வொருபது முரியதொ ரிசைகொள
     வுரைசெயும்
நீதிய ரவரிரு நிலனிடை நிகழ்தரு
     பிறவியே.                          11

திருச்சிற்றம்பலம்


பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்ற
முடையவர்கள். பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள்
சமணர்கள், இவ்விருவகை நீசர்களை விட்டு, சிவபெருமானைத்
தியானியுங்கள். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான்
வீற்றிருந்தருளும் பதியாவது, இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும்
அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த
திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கோசரம் - நீரிற் சஞ்சரிக்கும் மீன்களை. நுகர்பவர் -
உண்பவர்களாகிய சமணர்களும். கோ - நீர். துவர் கொழுகியன -
மருதந்துவரால் தோய்த்தனவாகிய. (கொழுகிய கு, சாரியை) துகிலினர் -
ஆடையை உடையவர்கள். பாசுர வினைதரு - (ஆரியத்தொடு செந்தமிழ்ப்)
பயனறிகிலாது வெறும்பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய. பளகர்கள்
- பாவிகள். பழிதரு மொழியர் - பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழியை
உடையவர்களுமாகிய. நீசரைவிடும் - விடுங்கள் இனி. நினைவுறும் -
தியானியுங்கள். நின்மலப் பொருளாகிய சிவபெருமானது உறையும்பதி -
புறவமே.

     11. பொ-ரை: மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம்
என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான
சிவபெருமானைப் போற்றி, அந்தணர்களின் தலைவனும், மிக்க
முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய
இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள்
இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர்.

     கு-ரை: போது இயல் - மலர்களையுடைய பொழில். அணி -