பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)84. திருப்புறவம்1043

சோலை சூழ்ந்த (புறவநன்னகர் உறை.) புனிதனை - தூயவுடம்பினனாகிய
சிவபெருமானை. தலைதமிழ்கெழு - மேகம்போற் பொழிகின்ற தமிழையுடைய.
விரகினன் - சமர்த்தன். அதற்குரியதாகிய இசை பொருந்தும்படி உரைசெயும்
நீதியர் - பாடும் முறைமை தவறாதோர். தலையல் - மழைபெய்தல். இதனை
"தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து" என்னும்
திருமுருகாற்றுப்படை(அடி.9)யால் அறிக.

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே
நிலவு முருகற்கும் நீலநக் கற்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண்டற்கும் - குலவிய
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை
மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக் - காதலாற்
புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவில் வைத்த மறையோனை - ஒண்கெழுவு
ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த
யாழை முரித்தும் இருங்கதவந் தான்அடைத்தும்
சூழ்புனலில் ஓடத்தொழில் புரிந்தும் - தாழ்பொழில்சூழ்
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல்கொண்டும்.

                        -நம்பியாண்டார் நம்பிகள்.