|
குற்றமில்
புகலியு ளிகலறு ஞானசம்
பந்தன
சொற்றக வுறமொழி பவரழி விலர்துயர்
தீருமே. 11 |
திருச்சிற்றம்பலம்
குறுகிய இடையுடைய உமாதேவியோடு,
சிவபெருமான் வீற்றிருந்தருளும்
திருச்சேறை என்னும் திருத்தலத்தைப் போற்றிக், குற்றமற்ற புகலியில்
அவதரித்த, எவரோடும் பகைமையில்லாத ஞானசம்பந்தன் அருளிய
இத்திருப்பதிகத்தை முறையோடு ஓதுபவர்கள் அழிவற்றவர்கள். அவர்களின்
துன்பங்கள் யாவும் தீரும்.
கு-ரை:
கவின் - அழகு. உறு - பொருந்திய. சிறு இடையவள் -
உமாதேவியார், புகலியுள். இகல் அறு - எவரொடும் பகைமையில்லாத,
ஞானசம்பந்தன். சொல் - பாடல்களை. சொல் - சினை ஆகுபெயர். தகவு
உற - முறையோடு, மொழிபவர், அழிவு இலர் எனவே அவரைப்பற்றிய
துயரும் அழிவின்றி நிற்கும் என்னற்க. அவை பற்றற நீங்கும் என்பதாம்.
தீர்தல் - விடற்பொருட்டாகும். (தொல், சொல், உரியியல். 22)
திருஞானசம்பந்தர்
புராணம்
பாடும்அர
தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார். -சேக்கிழார்.
|
|