பக்கம் எண் :

1064திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

87. திருநள்ளாறு

பதிக வரலாறு:

          சண்பையாண்டகையார் திருநள்ளாறரை வணங்கி, நற்றிருவேட்டினைக்
கழற்றிக் கைத்தலத்திடைக் கொண்டு, சிவநாமமே அழியாப் பொருளெனக்
காட்ட நெருப்பில் வேவாது நிற்க என்று இவ்வாறு தொடங்கிப் பாடியருளப்
பெற்றது இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்:345 பதிக எண்:87

 திருச்சிற்றம்பலம்

3734. தளிரிள வளரொளி தனதெழி
       றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை
     யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள்
     ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.               1


     1. பொ-ரை: இளந்தளிர் நாளுக்கு நாள் வளர்ந்து பசுமை அடைதல்
போல், வளரும் அருளின் எழில் திகழும் உமாதேவியின், குளிர்ந்த, வளரும்
இள ஒளிவீசம் அழகிய முலையை மகிழ்ந்து தழுவப் பெறுதலால். குளிர்ந்த
வளரொளி போன்று நள்ளாறர்தம் புகழ்கூறும், ‘போகமார்த்த பூண்
முலையாள்’ என்று தொடங்கும் (தி.1. ப.49. பா.1) திருப்பதிகம் எழுதப்பெற்ற
ஓலையை, அவர் திருமேனிபோல் பிரகாசிக்கின்ற நெருப்பிலிட்டால் அவை
பழுது இல்லாதனவாம் என்பது சத்தியமே.

     கு-ரை: வளர் - வளரக்கூடிய. தளிர் - தளிரின். இள ஒளி - இளம்
பிரகாசத்தின். எழில் தரு - அழகைத் தருகின்ற. திகழ் - விளங்குகின்ற.
மலைமகள் - உமாதேவியார். (குளிர் வளர் இள ஒளி.) வனம் - அழகை
உடைய முலை. இணை அவை - இரண்டும். குலவலின் -