பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)87. திருநள்ளாறு1065

3735. போதமர் தருபுரி குழலெழின்
       மலைமகள் பூணணி
சீதம தணிதரு முகிழிள
     வனமுலை செறிதலின்
நாதம தெழிலுரு வனையநள்
     ளாறர்தந் நாமமே
மீதம தெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.               2


மகிழ்ந்து தழுவப்பெறுதலால். நளிர் - குளிர்ந்த, (வளர், இள ஒளி). மருவு -
பொருந்திய (நள்ளாறர்தம்) நாமமே - புகழ்களேயாகும் இவை. ஆதலின்,
மிளிர் - அவர் திருமேனிபோற் பிரகாசிக்கின்ற (வளர் இளம்). எரி இடில் -
நெருப்பில் இட்டால். இவை - “போகமார்த்த” எனத் தொடங்கும் இத்
திருப்பதிகம் எழுதிய இவ்வேடும் இவைபோல்வனவும். பழுது இலை - பழுது
இல்லாதன ஆம். மெய்ம்மை - (இது) சத்தியம். ஐம்பான் மூவிடத்திற்கும்
பொது ஆனதால் இல்லை என்னும் குறிப்பு முற்று இவை என்ற
எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. முதிய, வலிய நெருப்பின் (சிவபெருமான்)
திறனை - இளநெருப்பு எரிக்குமா? என்ற குறிப்பு.

     2. பொ-ரை: மலர் கொண்டு புனைந்து அலங்கரிக்கப்பட்ட கூந்தலை
உடைய அழகிய மலைமகளான உமாதேவியின் ஆபரணம் அணிந்து,
குளிர்ச்சிதரும் சந்தனத்தை அணிந்த, அரும்பொத்த இளைய அழகிய
முலைகளைத் தழுவுகின்றவரும், நாத தத்துவம் அழகிய உருவாகக்
கொண்டவருமான திருநள்ளாறு இறைவரின் புகழ் கூறும் திருப்பதிகம்
எழுதப்பட்ட ஏடுகளை மேலான அவருருவான நெருப்பிலிட்டால் அவை
பழுதில்லாதனவாம் என்பது சத்தியமே.

     கு-ரை: போது அமர்தரு - மலர்கள் தங்கிய. புரி - பின்னிய (குழல்).
பூண் அணி - ஆபாரணத்தையணிந்த. சீதம் (அது) அணிதரு - (இயல்பான
குளிர்ச்சியோடு) சந்தனக் குழம்பையும் அணிந்த. சீதம் - பண்பாகுபெயர்.
முகிழ் - அரும்பை ஒத்த, இள, வனம், முலை, செறிதலின் அழுந்தத்
தழுவப்படுதலால். நாதம் (அது) நாத தத்துவம். எழில் உரு - அழகிய
உருவாகக்கொண்ட. அனைய - அத்தகைய நள்ளாறர்தம். நாமம் -
புகழாகிய இவை. மீ - மேலான. தமது - தம்முடையதான. எரியிடில் -
நெருப்பிலே இட்டால். பழுது இலை. மெய்ம்மையே. நெருப்பு,
சிவபெருமானுக் உரியதென்பது,