| 
           நண்ணிய 
            குளிர்புனல் புகுதுநள் 
                 ளாறர்தந் நாமமே 
            விண்ணிய லெரியினி லிடிலிவை 
                 பழுதிலை மெய்ம்மையே.               5 | 
         
       
	
         
          | 3739.  | 
           போதுறு 
            புரிகுழன் மலைமக | 
         
         
          |   | 
               ளிளவளர் 
            பொன்னணி 
            சூதுறு தளிர்நிற வனமுலை 
                 யவையொடு துதைதலின் 
            தாதுறு நிறமுடை யடிகணள் 
                 ளாறர்தந் நாமமே 
            மீதுறு மெரியினி லிடிலிவை 
                 பழுதிலை மெய்ம்மையே.              6 | 
         
        
            கு-ரை: 
        பண் இயல் - (உலகிற்கு) பண்பாட்டை அமைவித்த.  
        மலைமகள். பண் - கடைககுறை. இயல் மலைமகள் - வினைத்தொகை. இயல்  
        என்ற சொல்லின் பிறவினை விகுதி குன்றியது. மலைமகள் - உமா 
        தேவியாரின். கதிர் விடு - ஒளி வீசுகின்ற. பரு - பருத்த. மணி -  
        இரத்தினங்கள் பதித்த. அணி - ஆபரணத்தையணிந்த. நிறம் - மார்பிலே  
        உள்ள. கண் இயல் - அழகு பொருந்திய. நண்ணிய குளிர் -  
        குளிர்ச்சியையுடைய. புனல் புகுதும் - நீர்பாயும், நள்ளாறர். விண் இயல் -  
        ஆகாயம் வரைதாவும். 
            6. 
        பொ-ரை: மலர்களணிந்த பின்னிய கூந்தலையுடைய மலைமகளான  
        உமாதேவியாரின் பொன்னாபரணம் அணிந்த, சூதாடும் வட்டை ஒத்த,  
        தளிர்போன்ற நிறமுடைய அழகிய முலைகளோடு நெருங்கியிருத்தலால்,  
        பொன்போலும் நிறம் பெற்ற அடிகளாகிய நள்ளாற்று இறைவனின்  
        திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை மேல்நோக்கி  
        எரியும் இயல்புடைய இந்நெருப்பிலிட்டாலும் அவை பழுதில்லாதனவாகும்  
        என்பது, சத்தியமே. 
            கு-ரை: 
        போது உறு - மலர்கள் பொருந்திய. புரிகுழல் - பின்னிய  
        சடையையுடைய. மலைமகள் - உமாதேவியாரின். இள(ம்) வளர் - இளமை  
        மிகுந்த. பொன் அணி - பொன்னாபரணம் அணிந்த. சூது உறு -  
        சொக்கட்டான்காயை ஒத்த. (உறு - உவமவாசகம்). தளிர் நிறம் - தளிர்  
        போன்ற நிறத்தையுடைய. வனம் - அழகிய, முலையோடு.  
	 |