|
கொற்றவ
னெதிரிடை யெரியினி
லிடவிவை கூறிய
சொற்றெரி யொருபது மறிபவர்
துயரிலர் தூயரே. 11 |
திருச்சிற்றம்பலம்
போற்றும் திருப்பதிகம்
எழுதிய ஏடுகளை, நன்மைதரும் கழுமலநகரில் அவதரித்த திருஞானசம்பந்தன், பாண்டிய மன்னனின்
எதிரில், நெருப்பின் நடுவில் இடுகின்றபோது கூறிய, இத்திருப்பதிகத்தை ஓதும் அன்பர்கள்
துயரற்றவர்கள் ஆவர். மும்மலங்களினின்றும் நீங்கித் தூயராய் விளங்குவர்.
கு-ரை:
ஞானசம்பந்தன் கொற்றவன் எதிர் - நின்ற சீர் நெடுமாற நாயனாராகிய அரசர் எதிரில்.
இடை எரியினில் - நெருப்பு நடுவில். துயர் தூயர் - ஓர் சொல் நயம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
நன்மை உய்க்கும்மெய்ப்
பதிகத்தின் நாதனென் றெடுத்தும்
என்னை ஆளுடைஈசன்தன் நாமமே என்றும்
மன்னு மெய்ப்பொரு ளாமெனக் காட்டிடவன்னி
தன்னி லாகெனத் தளிரிள வளரொளி பாடி.
செய்ய தாமரை அகவித ழினுமிகச் சிவந்த
கையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் னிட்டார்.
-சேக்கிழார்.
|
|