| 3743. |
அத்திர
நயனிதொன் மலைமகள் |
| |
பயனுறு
மதிசயச்
சித்திர மணியணி திகழ்முலை
யிணையொடு செறிதலின்
புத்தரொ டமணர்பொய் பெயருநள்
ளாறர்தந் நாமமே
மெய்த்திர ளெரியினி லிடிலிவை
பழுதிலை மெய்ம்மையே. 10 |
| 3744. |
சிற்றிடை
யரிவைதன் வனமுலை |
| |
யிணையொடு செறிதரும்
நற்றிற முறுகழு மலநகர்
ஞானசம் பந்தன |
கு-ரை:
கான்முகம் - காட்டிடத்துள்ள. மயில் இயல் - மயில் போன்ற
சாயல். பால் முகம் இயல் (பால் சுரக்கும் இடமாகப் பொருந்திய, தமக்கு
ஞானப்பாலை ஊட்டியருளிய செயலை நினைப்பித்தவாறு) பணை - பருத்த,
இணைமுலை - உபயதனங்கள். மேல்முக(ம்) எரி - மேல் நோக்கிய நெருப்பு.
10.
பொ-ரை: அம்பு போன்று கூர்மையான கண்களையுடைய
தொன்மையான மலைமகளான உமாதேவியின் பயன்தரும் அதிசயம்
விளைவிக்கும், பலவகையான இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்
அணியப் பெற்றுள்ள இருமுலைகளோடு நெருங்கியிருப்பவரும்,
புத்தர்களாலும், சமணர்களாலும் உணரப்படாதவரும் பொய்யினின்று
நீங்கியவருமான திருநள்ளாற்று இறைவரின் திருநாமத்தைப் போற்றும்
திருப்பதிகம் எழுதப்பட்ட ஏடுகளை, திரண்டு எரியும் இந்நெருப்பில்
இட்டாலும் அவை பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.
கு-ரை:
அத்திரம் நயனி - அம்பு போன்ற கண்களை உடையவள்.
அதிசயம் - அதிசயம் விளைக்கும். சித்திரம் - பல வகையான. பொய்
பெயரும் - பொய்யினின்றும் நீங்கிய நள்ளாறர்.
11.
பொ-ரை: சிறிய இடையினையுடைய உமாதேவியின் அழகிய
முலைகளோடு நெருங்கியிருக்கும் திருநள்ளாற்று இறைவனைப்
|