பக்கம் எண் :

1082திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதொர்
     சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர்
     விளமரே.                           8

3753. தொண்டசை யுறவரு துயருறு காலனை
       மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற வாரழ
     லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனி
     லளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில்
     விளமரே.                           9


     8. பொ-ரை: தெளிவான நீரையுடைய கடல்சூழ்ந்த, அழகிய நீண்ட
மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி,
கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர்
சிவபெருமான். கடலையடையும் கங்கையை, சடையில் தாங்கியவர்.
விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய
கண்டத்தர். இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை
பொருந்திய நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: தெண் கடல் - தெளிவான நீரையுடைய கடல். புடை அணி
- சுற்றிய, இலங்கையர் தலைவனை. பண்பட அடர் செய்த - நன்றாக
அடர்த்த. கழல் வடிவினர் - கழலோடு கூடிய வடிவையுடையவர். கடல்
அடைபுனல் - கடலையடையும் (கங்கை) நீர். திகழ்சடை புகுவது ஓர்
சேர்வினார் - விளங்கும் சடையிற் புகுவதாகிய சேர்க்கையையுடையவர். விண்
- விண்ணை அளாவிப் பரவிய (விடம்) கடல். விடம் - விடக்கறை. மலி -
(கண்டத்தின்கண்) பொருந்திய அடிகள்.

     9. பொ-ரை: சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை
அழியும்படி, மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும்
படி செய்து, பின்னர்த் தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவ
பெருமான். பிரமன், திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக்
காண்டற்கரிய அழல் வடிவானவர். மேகம் போன்ற கரிய