3755. |
வெந்தவெண்
பொடியணி யடிகளை விளமருள் |
|
விகிர்தரைச்
சிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை
செழுவிய
அந்தணர் புகலியு ளழகம ரருமறை
ஞானசம்
பந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை
பறையுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
காட்டும் திருட்டுத்தனமிக்கவரும்,
தவம் அறிகிலாதவருமான
சமண, புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க.
வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய, வளம் மிகுந்த
நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை
அன்போடு போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
உலகத்து அறிவுடையார்களால் வணங்கியேத்துதற்குரிய
மதங்கள் பல உண்டு. (ஒள்ளியர் - அறிவுடையவர்). அவற்றுள் களவினரும்,
தவம் அறிகிலாதாரும் ஆகிய சமண புத்தர் தம் பள்ளியினர் கூறும் சமய
நெறிகளை மெய்யென்று கருதீர்களாய், வெள்ளிய பிறையணி சடையினர்
விளமரைப் பரிவோடு பேணுவீர்கள் ஆக. (பரிவு - அன்பு) என்பது
இப்பாடலின் திரண்டபொருள். கொள்ளிய - கொள்ளியனைய. (களவினர்)
நீறுபூத்த கொள்ளி - தவவேடம் பூண்ட வஞ்சகருக்கு உவமை. குண்டிகையர்
சமணரும் தவம் அறிகிலார் - புத்தரும் (குண்டிகையர் எனப்பிரித்துக் கூறி னமையின்)பள்ளி
என்பது இடவாகு பெயராய் அங்கு உறைவோரையும்,
அது இலக்கணையால் அவர் கூறும் உபதேசங்களையும் உணர்த்திற்று.
11.
பொ-ரை: பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண்நீற்றினை
அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
வேறுபட்டவரை (விகிர்தர்), சிந்தையுள் இடையறாது இருத்தும்படி,
அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த
அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய
இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.
கு-ரை:
விகிர்தர் - (பிறரின்) வேறுபட்டவர். சிந்தையுள் இடைபெறு
(இடை - இடம்) என்றது:- “உளம் பெருங்களன் செய்ததும் இலை நெஞ்சே”
என்ற திருவாசகத்தின் (தி.8) கருத்து. செழுவிய - செழுமை பொருந்திய
(புகலி). அருவினை. பறையும் - நீங்கும்.
|