பக்கம் எண் :

1088திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3760. மறைகொளும் திறலினா ராகுதிப்
       புகைகள்வா னண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணிசெழும்பதி
     திகழ்மதிற் கொச்சை தன்பால்
உறைவிட மெனமன மதுகொளும்
     பிரமனார் சிரமறுத்த
இறைவன தடியிணை யிறைஞ்சிவாழ்
     நெஞ்சமே யஞ்சனீயே.                5

3761. சுற்றமு மக்களுந் தொக்கவத்
       தக்கனைச் சாடியன்றே
உற்றமால் வரையுமை நங்கையைப்
பங்கமா வுள்கினானோர்


     5. பொ-ரை: நெஞ்சமே! வேதங்களை அவற்றின் பொருள் உணர்ந்து
ஓதும் வன்மை படைத்த அந்தணர்கள் இயற்றுகின்ற வேள்விப் புகை
ஆகாயத்தை அளாவி நெருங்குதலால் மழை பொழிய, அந்நீர் தங்கிய
கரைகளையுடைய நீர்நிலைகளால் அழகுடன் விளங்கும் செழும்பதியாகிய,
மதில்கள் விளங்குகின்ற திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை, தாம்
எழுந்தருளும் இடமாகக் கொண்ட மனமுடையவரும், பிரமனின்
சிரமறுத்தவருமான சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் வணங்கி
வாழ்வாயாக! நீ அஞ்சவேண்டா.

     கு-ரை: மறை கொ(ள்)ளும் திறலினார் - வேதம் ஓதலாற் பெற்ற
வலிமை உடையவர்கள். ஆகுதிப்புகைகள். வான் அண்டமிண்டி -
ஆகாயத்தை அளாவ நெருங்கலால். மிண்டி வினையெச்சத்திரிபு. வேள்வி
யோம்பலால் கால மழை வழாது பெய்து, வயல் பாத்திகளில் தங்கும் நீர்
வளப்பத்தால் அழகுடைத்தாகிய செழும்பதி என்பது முற்பகுதியின் கருத்து.
கொச்சை தன்பால் - திருக்கொச்சை வயமாகிய தலத்தினிடம். உறைவு இடம்
என. மனம் அது கொள்ளும் இறைவன் - பிரமனார் சிரம் அறுத்த இறைவன்
எனக் கொள்க.

     6. பொ-ரை: நெஞ்சமே! சிவனை நினையாது செய்த தக்கன்
வேள்வியைத் தகர்த்து, அதற்குத் துணையாக நின்ற சுற்றத்தார்களையும்,
மற்றவர்களையும் தண்டித்து, தன் மனைவி தாட்சாயனி தக்கன் மகளான
தோடம் நீங்க இமயமலை அரையன் மகளாதற்கும்,