|
குற்றமில்லடியவர்
குழுமிய
வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவ மருள்புரி நம்பனை
நம்பிடாய் நாளுநெஞ்சே. 6 |
| 3762. |
கொண்டலார்
வந்திடக் கோலவார் |
| |
பொழில்களிற்
கூடிமந்தி
கண்டவார் கழைபிடித் தேறிமா
முகிறனைக் கதுவுகொச்சை
அண்டவா னவர்களு மமரரு
முனிவரும் பணியவாலம்
உண்டமா கண்டனார் தம்மையே
யுள்குநீ யஞ்சனெஞ்சே. 7 |
தன் திருமேனியில்
ஒரு பாகமாதற்கும் நினைத்தருளியவனும், ஒரு
குற்றமில்லாத அடியவர்கள் குழுமிய வீதிகள் சூழ்ந்த திருக்கொச்சைவயம்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து, திரிகரணங்களும் ஒன்றிச்
சிவவழிபாடு செய்பவர்கட்கு அதன் பயனை அளித்து அருள்
புரிகின்றவனுமாகிய சிவபெருமானை எந்நாளும் நீ விரும்பி வாழ்வாயாக!
கு-ரை:
தக்கன் மகளான தோடம் நீங்க, இமய மலையரையன்
மகளாதற்கும், தன் உடம்பில் ஒரு பங்கில் வைத்தற்கும் நினைத்தருளியவன்
என்பது இரண்டாம் அடியின் கருத்து. மால்வரையுமை (ஆக)
நங்கையைப்பங்கம் (ஆக) எனக் கூட்டுக. ஓர் குற்றம் இல் - ஒரு குற்றமும்
இல்லாத. அடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சை மேவி. நல்தவம் -
நல்லதவத்தின் பயன்களை. அருள்புரி நம்பனை நம்புவாயாக.
7.
பொ-ரை: நெஞ்சமே! மேகங்கள் வந்தவுடன், அழகிய நீண்ட
சோலைகளிலுள்ள குரங்குகள் கூடி, தங்கட்கு முன்னே காணப்படுகின்ற
மூங்கில்களைப் பற்றி ஏறி, அந்தக் கரிய மேகங்களைக் கையால் பிடிக்கின்ற
திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, அண்ட
வானவர்களும், தேவர்களும், முனிவர்களும் வந்து பணிய, ஆலகால
விடத்தினை உண்டு அவர்களைக் காத்த பெருமையையுடைய
கழுத்தினையுடைய சிவபெருமானையே எப்பொழுதும் நீ நினைத்துத்
தியானிப்பாயாக! நீ அஞ்சல் வேண்டா.
|