| 3763. |
அடலெயிற்
றரக்கனார் நெருக்கிமா |
| |
மலையெடுத்
தார்த்தவாய்கள்
உடல்கெடத் திருவிர லூன்றினா
ருறைவிட மொளிகொள்வெள்ளி
மடலிடைப் பவளமு முத்தமுந்
தொத்துவண் புன்னைமாடே
பெடையொடுங் குருகினம் பெருகுதண்
கொச்சையே பேணுநெஞ்சே. 8 |
கு-ரை:
கோலம் - அழகை உடைய. வார் - நெடிய. பொழில்களில் -
சோலைகளில். கொண்டலார் - மேகங்கள். வந்திட - வந்து படிய. (குரங்குகள்
கூடிக்கொண்டு தங்களுக்கு முன்னே காணப்படுகின்ற) கழைபிடித்து ஏறி -
மூங்கில்களைப்பற்றி ஏறி. மாமுகிறனை - கரிய அம்மேகத்தை. கதுவு -
கையாற் பிடிக்கின்ற (கொச்சை). கொண்டல், கொண்டலார் என்று உயர்த்தற்
கண் வந்தது, அதன் சிறப்புநோக்கி. ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியும்,
ஒன்றனைக்கூறும் பன்மைக் கிளவியும்...சொல்லாறல்ல (தொல். சொல்.
கிளவியாக்கம். சூத்திரம்.27). தென்றலார் புகுந்துலவும்
திருத்தோணிபுரத்துறையும் கொன்றை வார்சடையார் (தி.1.ப.60.பா.7.) என
வந்தமையும் காண்க. அமரரும் - தேவர்களும், அண்ட வானவர்களும் -
அவரொழிந்த, ஏனைய அண்டங்களிலுள்ள, அயன் அரி முதலிய
தேவர்களும்.
8.
பொ-ரை: நெஞ்சமே! வலிமை வாய்ந்த பற்களையுடைய
அரக்கனான இராவணன் பெரிய திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க,
ஆரவாரித்த அவனது வாய்களுடன் உடலும் நெரியும்படி தன் காற்பெரு
விரலை ஊன்றினவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, ஒளி
பொருந்திய வெள்ளியைப் போன்ற இதழ்களையுடைய பூக்களின்
இடையிடையே பவளம் போன்ற செந்நிறப் பூக்களும், முத்துக்களைப்
போன்ற அரும்புகளும், அமைந்த பூங்கொத்துக்களையுடைய செழித்த
புன்னைமரங்களின் பக்கத்தில் பறவை இனங்கள் தங்கள் பெடைகளோடு
வளர்தலையுடைய திருக்கொச்சைவயம் என்னும் திருத்தலத்தை நீ போற்றி
வழிபடுவாயாக!
கு-ரை:
அடல் எயிற்று - வலிய பற்களையுடைய. அரக்கனார் -
இராவணன். (இகழ்ச்சிக் குறிப்பு) வாய்கள். உடல் கெட - உடலோடு
நொறுங்க திருவிரல் ஊன்றினான். வெள்ளி மடல் இடை -
|