பக்கம் எண் :

ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் வரலாறு11

                        குருபாதம்

             திருக்கயிலாய பரம்பரத் தரும ஆதீனம்
                 26 ஆவ குருமகா சந்நிதானம்

               ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
              பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய


                       ஆசியுரை

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்
     அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்ற நயந்தவனே
     பாடி னாய்மற யோடுபல் கீதமும்
பல்ச டப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
     சூடி னாய்அரு ளாய்சுருங் கஎம தொல்வினயே.

                                  (தி. 3 ப.1 பா.1)

சிதம்பரம், சிற்றம்பலம்.

     'ஓம்' என்ற பிரணவத்த முதலில் சொல்லிய பிறகே வேதம் ஓத
வேண்டும் என்ப வடமொழி வேத மரபு.

     அதைப் போலவே தமிழ் வேதமாகிய திருமுறகளப் பிரணவ
வடிவாயுள்ள "திருச்சிற்றம்பலம்" என்ற சொற்றொடரச் சொல்லியபிறகே
ஓதவேண்டும் என்ப தமிழ்வேத மரபு.

     "சித்பரவியோமமாகும் திருச்சிற்றம்பலத்ள் நின்று பொற்புடன் நடம்
செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி" என்ப சேக்கிழார் திருவாக்கு.
"சித்பரவியோமம்" என்ப அறிவாகாயம் எனப்படும். அவே பிரணவ வடிவம்.
அவே திருச்சிற்றம்பலமுமாம். சித் - அறிவு. அம்பரம் - ஆகாயம், எனவே
சிதம்பரம் என்ப அறிவாகாயம் எனப்பெறும். அறிவு என்ப பதியறிவயே
குறிக்கும். பசு, பாச அறிவக்