பக்கம் எண் :

12ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

குறியாவாம். சிற்றம்பலம் - சிறுமை அம்பலம். சிற்றம்பலம் - இதுவும்
ஞானாகாயப் பெருவெளியையே குறிக்கும்.

     சிதம்பரம் எனினும் சிற்றம்பலம் எனினும் ஒக்கும்.

ஐந்தொழில் நடனம்:

     இச்சிற்றம்பலத்திலே நடனமிடும் பெருமானே நடராஜப் பெருமான்.
இவருடைய நடனம் “பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம்” எனப்
பேசப்பெறும். ஐந்தொழில் நடனத்தையே வடமொழியில் இப்படிக் கூறுவர்.

     இவருடைய நடனத்தால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,
அருளல் என்னும் ஐந்தொழில்களும் ஆனந்தமாக நடைபெறுகின்றன.

     படைத்தல், அவர்தம் வலதுமேல் கரத்தில் உள்ள உடுக்கை ஒலியால்
நிகழ்கிறது.

     காத்தல், அவர்தம் வலதுகீழ்க் கரமாகிய அபயகரத்தால் நிகழ்கிறது.

     அழித்தல், அவர்தம் இடது மேல்கரத்தில் உள்ள அக்கினியால்
நிகழ்கிறது.

     மறைத்தல், முயலகன்மீது அவர் ஊன்றிய வலது திருவடியால்
நிகழ்கிறது.

     அருளல், அவர்தம் தூக்கிய திருவடி என்றும், குஞ்சிதபாதம் என்றும்
பேசப்பெறும் இடது திருவடியால் நிகழ்கிறது.

ஊன நடனம்:

     ஐந்தொழிலால்தான் உயிர்கள் பிறந்தும், வாழ்ந்தும், இறந்தும் பலகோடி
பிறவிகள் எடுக்கின்றன. எடுப்பதால் பிறவிதோறும் சிறிது சிறிதாக
வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி அடைய அடைய ஆசாபாசங்கள் சிறிது
சிறிதாக அகல்கின்றன. ஆசாபாசம் அகலவே முத்திப்பேற்றை அடையத்
தகுதி பெறுகின்றன. ஆசாபாசங்களில் உழன்று நிற்கும் நிலையில்
ஆன்மாக்கள் பெத்த நிலையில் உள்ளன. அஃதாவது கட்டு நிலையில்
உள்ளன. இவ்வான்மாக்களைப்