பக்குவப்படுத்தும் நடனத்தை ஊன நடனம் என்பர்.
ஞான
நடனம்:
பிறவியில் அருவருப்புற்று
இனிப் பிறவி வேண்டாம் என்ற மனோநிலை
எய்திய ஆன்மாக்கள் முத்தான்மாக்கள் எனப்பெறுவர்.
அவர்களை ஈடேற்றம்
செய்வதற்குப் புரியும் நடனம் ஞான நடனம்
எனப்பெறும்.
முன்சொல்லிய
நடராஜப் பெருமானின் வலது மேற்கரத்தில் உள்ள
உடுக்கை ஒலி, முன்பு பெத்த காலத்தில் உலகைத் தோற்றுவித்தது. அதே
ஒலி இப்பொழுது முத்தான்மாக்களின் மாயையை உதறுகிறது.
இடது மேல் கரத்தில்
உள்ள அக்கினி வல்வினையைச் சுட்டு
அழிக்கின்றது.
முன்சொன்ன அதே
வலதுபாதம் முயலகனாகிய ஆணவத்தை
அமுக்குகிறது.
முன்சொன்ன அதே
இடதுபாதம் ஆகிய குஞ்சிதபாதம்
முத்தான்மாக்களாகிய உயிர்களைப் பிறவிக்கடலினின்றும் அருளால்
எடுக்கிறது.
குஞ்சிதபாதமாகிய ஆடியபாதம்,
பிறவிக் கடலினின்றும் எடுத்த
உயிர்களை, அத்திருவடியினின்றும் நெகிழ்ந்து விடாமல், அவ்வருள்
திருவடியிலேயே பேரின்பம் நுகர, பெருமானின் வரதகரமாகிய இடதுகரம்
தூக்கிய திருவடிக்குமேல் வளைந்து நின்று, தூக்கிய திருவடியில்
ஆன்மாக்களை அழுத்தி, பேரின்ப வீட்டைப் பெறச் செய்கிறது.
ஒன்றில் இரண்டு:
நடராஜப் பெருமான்
ஒரே ஆட்டத்தில் ஊன நடனம், ஞான நடனம்
என்ற இருவேறு நடனங்களையும் நிகழ்த்தி, பெத்தான்மாக்களின் ஆசைகளை
ஊன நடனத்தால் நிறைவேற்றியும், அநுபவித்து உவர்ப்புத் தோன்றி,
வீடுபேற்றில் விருப்புத் தோன்றும் முத்தான்மாக்களுக்கு ஞான நடனத்தால்
வீடுபேற்றை நல்கியும் அருள் புரிகிறார்.
|