பக்கம் எண் :

14ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை 

     இவற்றையெல்லாம் நமக்குத் தெளிவாக விளக்கியுள்ள உண்மை
விளக்கம் என்ற சித்தாந்த நூலில் உள்ள இரு பாடல்களையும் காண்போம்.

ஊனமும், ஞானமும்:

     ஊனம் என்பது குறைவைக் குறிப்பது. குறைவுடைய உடல்
தோற்றத்தையும், பஞ்ச பூத உலகத் தோற்றத்தையும் குறிப்பது. ஊனம் -
குறைவு; தசை.

     ஞானம் என்பது நிறைவைக் குறிக்கும்.

     குறைவுடைய உயிர்களை நிறைவு செய்தற்பொருட்டு முதலில் ஊன
நடனம் புரிந்து, அவ்வுயிர்களை முத்தான்மா நிலைக்கு உயர்த்துவதால் அது
ஊன நடனம் எனப்பெற்றது.

     முத்தியில் விருப்புற்ற அவ்வுயிர்களை ஈடேற்றம் செய்யப் புரிவதே
ஞான நடனம். உயிர்களின் மாயையை உதறி, வல்வினையைச் சுட்டு, ஆணவ
மலத்தை அமுக்கி, தூக்கிய திருவடியால் உயிர்களைப் பிறவிக் கடலினின்றும்
எடுத்து, அவ்வாறு எடுக்கப்பெற்ற உயிர்களைத் திருவடியிலேயே வரத
கரத்தால் அப்பேரின்பத்திலேயே திளைக்கச் செய்வதும், பேரா இன்பப்
பெருவாழ்வாம். முத்தி நிலையைப் பெறுமாறு செய்வதும் ஞான நடனமாம்.

ஊன நடனப் பாடல்:

தோற்றம் துடியதனில் தோயும்திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாம்
ஊன்றுமலர்ப் பதத்தே உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு

                 -திருவதிகை மனவாசகங் கடந்தார்

ஞான நடனப்பாடல்:

மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந் தையார் வரதந் தான்

                 -திருவதிகை மனவாசகங் கடந்தார்