| |
கயலன
வரிநெடுங் கண்ணியொ
டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே 10 |
| 3777.
|
விண்ணுலாம்
விரிபொழில் விரைமணற் |
| |
றுருத்திவேள்
விக்குடியும்
ஒண்ணுலாம் மொலிகழலாடுவா
ரரிவையொ டுறைபதியை
நண்ணுலாம் புகலியு ளருமறை
ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலா மருந்தமிழ் பாடுவா
ராடுவார் பழியிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
கண்களையுடைய உமாதேவியோடு
பகலில் அகன்ற நகராகிய திருத்
துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக் குடியில்
வீற்றிருந்தருளுகின்றார். அவரை வழிபட்ட உய்வீர்களாக.
கு-ரை:
அயம் முகம் வெயில் - பழுக்கக்காய்ச்சிய இரும்பு போற்
சுடும் வெயிலில். நிலை (தவமென்று நிற்றலையுடைய) துறவிகளாகிய
அமணரும், குண்டரும், அவருள் இல்லறத்தாராகிய கொடியோரும்.
சாக்கியரும் - புத்தரும், நயமுக உரையினர் - விரும்பத்தக்க முகத்தோடு
பேசுதலையுடையவர். நகைக்கத்தக்க கதைகளைக் கட்டித் திரிபவர் ஆதலால்
அவர் உரையையும், சரிதையையும் கொள்ளாது. துருத்தியார் வேள்விக்
குடியிலிருப்பவர், அவர் அடி சார்ந்து உய்வீர்களாக என்க.
11.
பொ-ரை: ஒளிவிடும், ஒலிக்கின்ற கழல்கள் அணிந்து திருநடனம்
செய்யும் சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற, ஆகாயம்வரை
உயர்ந்துள்ள விரிந்த சோலைகள் நிறைந்த, மணம் பொருந்திய மணற்
பரப்பையுடைய திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய திருத்தலங்களைப்
போற்றி அனைவரும் வழிபடும் திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல
ஞானசம்பந்தன் பாடிய பண்ணோடு கூடிய இந்த அரிய தமிழ்ப்பதிகத்தைப்
|