பாடுபவர்களும், பரவசமடைந்து
ஆடுபவர்களும் எவ்விதமான பழியும்,
பாவமும் இல்லாதவர்களாவர்.
கு-ரை:
துருத்தி:- ஆற்றிடைக் குறையாதலால் விரைமணல் துருத்தி
என்றார். ஒண்(மை)கடைக்குறை, கழல் ஆடுவார் - திருவடியைத் தூக்கி
நின்றாடுவார். நண் - அனைவரும் புகலிடமாக அடைவதாகிய - (புகலி)
பாடுவார், ஆடுவார் பழி பாவங்கள் இல்லாதவராவர். பாவம், உபலட்
சணத்திற் கொள்ளப்பட்டது.
திருஞானசம்பந்தர்
புராணம்
செழுந்திரு
வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனல்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையுங் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.
-சேக்கிழார்.
ஆளுடைய
பிள்ளையார் திருக்கலம்பகம்
பிரானை
மெய்த்திரு ஞானசம் பந்தனை
மறையவர் பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக்
குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினில் அவனருள் நினைவொடு
தளர்வுறு தமியேனுக்
கிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற்
றினிவிடி வறியேனே.
-நம்பியாண்டார்
நம்பி.
|
|