புண்ணிய மூர்த்தியான
சிவபெருமானைப் போற்றி, சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய
இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.
கு-ரை:
தாழ் - ஓடிப் பாய்கின்ற. பள்ளந்தாழுறு புனலில் (தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி
(மென்புனலையுடைய காவிரி), இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க
பாடல். கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும். கோழைமிடறு பாடற் கேலாதது
கோழைமிடறாக கவிகோளும் இலவாக இசைகூடும் வகையால் எனவரும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும்
அறிக. (தி.3 ப.71. பா.1.) அழைத்தல் - பாடுதல். அழைத்தல் என்பதற்கு மறு சொல்
விளித்தல் என்பது. அதன் பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை கொம்பர் இருங்குயில்
விளிப்பன காணாய் (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும் அழியாத.
வானுலகு - முத்தியுலகம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
வடகுரங்
காடு துறையில் வாலியார்
தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில் அறியச்
சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து புறத்துள்ள
தானங்கள் போற்றிப்
படைகொண்ட மூவிலை வேலார் பழனத்
திருப்பதி சார்ந்தார்.
-
சேக்கிழார்.
|
|