| 
         
          | 3789. | என்றுமோ 
            ரியல்பின ரெனநினை |   
          |  | வரியவ 
            ரேறதேறிச் சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும்
 பலிகொளு மியல்பதுவே
 துன்றுதண் பொழினுழைந் தெழுவிய
 கேதகைப் போதளைந்து
 தென்றல்வந் துலவிய திருநெல்வேலி
 யுறை செல்வர்தாமே.                 2
 |  
         
          | 3790. | பொறிகிள 
            ரரவமும் போழிள |   
          |  | மதியமுங்கங் கையென்னும் நெறிபடு குழலியைச் சடைமிசைச்
 சுலவிவெண் ணீறுபூசிக்
 |  
  யுறைவர் செல்வர், 
        அவர் நாமமாகிய திரு ஐந்தெழுத்துக்கள், மருந்து, மந்திரம், மறுமைக்கண் நன்மை விளைக்கும் நெறிகள், மற்றும் எல்லா
 நன்மைகளும் ஆகும். அன்றியும் தீர்த்தற்கரிய துயரங்களும் கெடும்.
 பொருந்துதண் - குறிப்பு (பா.8.) காண்க.
       2. 
        பொ-ரை: நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து, செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற
 திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே
 தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர். அவர்
 இடபவாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும்
 சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர். அவரை வழிபடுவீர்களாக.
       கு-ரை: 
        நெருங்கிய குளிர்ந்த சோலைகளிற் புகுந்து, தழைத்து எழுந்த தாழம்பூமடல் பொடிகளைத் திமிர்ந்து கொண்டு தென்றல் வந்துலவிய
 திருநெல்வேலியுறை செல்வர்தாம், என்றும் ஓரியல்பினரென நினைக்க
 முடியாதவர். (சில சமயம்) காளையில் ஏறிச்சென்று செடிச்சியர் (வேடர்)
 போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் பிச்சையேற்கும் தன்மையும்
 அவருக்கு உண்டு
       3. 
        பொ-ரை: புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை
 |