| 
         
          | 3809. | செம்பொன்மா 
            மணிகொழித் தெழுதிரை |   
          |  | வருபுன 
            லரிசில்சூழ்ந்த அம்பர்மா காளமே கோயிலா
 வணங்கினோ டிருந்தகோனைக்
 கம்பினார் நெடுமதிற் காழியுண்
 ஞானசம் பந்தன்சொன்ன
 நம்பிநாண் மொழிபவர்க் கில்லையாம்
 வினைநலம் பெறுவர்தாமே.             11
 |   திருச்சிற்றம்பலம் 
  குற்றமுடையவை. அவற்றைக் 
        கேட்கவேண்டா. பாம்பைக் கச்சாக அணிந்தவனும், தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள்
 புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர் மாகாளம்
 என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக!
      கு-ரை: 
        சாக்கியக்கயவர்கள் - புத்தர்களாகிய கீழ்மக்களும், (தலைமயிர் பறித்தலையுடைய) கையர் - வஞ்சகர்களும், (பொய்யினால்
 சிருட்டித்த நூல்களிலுள்ள) மொழியவை - உபதேசங்கள். பிழையவை -
 குற்றமுடையவை, (ஆதலால் அவற்றை மெய்யென வழிபடுவீர்களாகிய
 நீங்கள் அவ்வழிபடுதலினின்று விலகி, அம்பர் மாகாளமேயடைமின்). வீக்கிய
 அரவுடைக்கச்சையான் - பாம்பைக் கச்சாகக் கட்டியவன், இச்சையானவர்
 கட்கு எல்லாம் - தன்னிடத்து விருப்பமுடையவர்களுக்கு எல்லாம். ஆக்கிய
 - அருளை வைத்த (அரன்,) தலை (பறி) - முதலிற் கூறும் சினையறி கிளவி.
 மொழியவை - அவை பகுதிப்பொருள் விகுதி, பிழைய - பலவின்பால்
 வினைமுற்று. வை - விகுதி மேல்விகுதி வருவித்துரைக்கப்பட்டது.
       11. 
        பொ-ரை: செம்பொன்னையும், இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திரு
 அம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள,
 உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சங்கு, சுட்ட
 சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில்
 அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி,
 நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை. அவர்கள் எல்லா நலன்களும்
 பெறுவர். இது உறுதி.
       கு-ரை: 
        (செம்பொன்னையும் இரத்தினங்களையும் கொழித்துக்  |