பக்கம் எண் :

1128திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கிளம்பி அலைவரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த அம்பர் மாகாளமே
கோயிலாக அணங்கினோடு இருந்த,) கோனை - தலைவனை, கம்பின் ஆர்
நெடுமதில் - சங்கு, சுட்ட சுண்ணாம்பினால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்.
கம்பு - சுண்ணாம்புக்கு ஆனது கருவியாகுபெயர், சொன்ன -
சொன்னவற்றை, (வினையாலணையும் பெயர்,) நம்பி - விரும்பி, நம்பு என்பது
உரிச்சொல், நாள்மொழிபவர் - நாள்தோறும் பாடுபவர்களுக்கு, வினை
இல்லையாம், நலம் பெறுவர்.

திருஞானசம்பந்தர் புராணம்

அம்பர் மாநகர் அணைந்துமா
     காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதிற் கோயிலை
     வலங்கொண்டு திருமுன்பு பணிந்தேத்தி
வம்பு லாமலர் தூவிமுன்
     பரவியே வண்டமிழிசைமாலை
உம்பர் வாழநஞ் சுண்டவர்
     தமைப்பணிந் துருகும்அன் பொடுதாழ்ந்தார்.

                                   - சேக்கிழார்


ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

போற்று வாரிடர் பாற்றிய புனிதன்
     பொழில்சு லாவிய புகலியர் பெருமான்
ஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்
     எம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனங் காவல் புரிந்தென்
     சிந்தை கொள்வதுஞ் செய்தொழி லானால்
மாற்றம் நீரெமக் கின்றுரை செய்தால்
     வாசி யோகுற மாதுந லீரே.

                            -நம்பியாண்டார் நம்பி.