| பதிக வரலாறு:       சீகாழிக்குரியது. 
        பெரிய புராணத்துள் கிளந்தோதப் படாதது.  திருமுக்கால்பண்: 
        சாதாரி
 
         
          | ப.தொ.எண்: 
            352 |  | பதிக 
            எண்: 94 |   திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3810. | விண்ணவர் 
            தொழுதெழு வெங்குரு மேவிய |   
          |  | சுண்ணவெண் 
            பொடியணி வீரே சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
 எண்ணவல் லாரிட ரிலரே.              1
 |  
     1. 
        பொ-ரை: தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற
 வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம்
 போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம்
 தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள்
 ஆவர்.
       கு-ரை: 
        தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு. வெங்குரு மேவிய
 பொடியணிவீரேயென்க. நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும்
 எழிலுடைமையான், அக்கோலம் தொழுது எழுவார் உள்ளத்து நீங்காது
 நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு ஆம் என்னும் பேராசிரியர் உரை
 இங்குக் கருதத்தக்கது. தொழுகழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் -
 தியானித்தல், ஆறுகோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள்
 தொடங்கித் தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம -
 உம்முடைய (கழல்கள்).
 |