பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)94. திருவெங்குரு1131

3813. விண்டலர் பொழிலணி வெங்குரு மேவிய
       வண்டமர் வளர்சடை யீரே
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
     தொண்டர்க டுயர்பிணி யிலரே.         4

3814. மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
       அக்கினொ டரவசைத் தீரே
அக்கினொ டரவசைத் தீரும தடியிணை
     தக்கவ ருறுவது தவமே.               5


இளம்பிறையென்னப்பட்டது, “முற்றாத பான் மதியஞ் சூடினானே” என்றார்
அப்பர் மூர்த்திகளும். சடையீராகிய உமது இரண்டு திருவடிகளையும்
நினைக்க உற்ற பிணி நீங்கப்பெறுவார்கள். “மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல
அடி” (தி.6.ப.6.பா.9.) என்ற கருத்து.

     4. பொ-ரை: முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய
சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய
சிவபெருமானே! வண்டுகள் விரும்பும் சடையினையுடைய பெருமானாகிய
உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும், பிணியும்
அற்றவர்கள் ஆவர்.

     கு-ரை: விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற (பொழில்), வண்டு
அமர்சடை - வண்டு விரும்பும் சடை, எனவே மலர்மாலையணிந்த
சடையென்பது பெறப் பட்டது. அமர்தல் - விரும்புதல், (துயர்பிணி, இலர்)
துயர் - உள்ளம் பற்றியது, பிணி - உடலம் பற்றியது இலர் - இல்லாதவர்
ஆவார்.

     5. பொ-ரை: அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அக்குப்பாசியோடு
பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே! அக்குப்பாசியோடு பாம்பையும்
அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற
அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும்.

     கு-ரை: மிக்கவர் - அன்பின் மிக்கோர், அக்கினோடு - அக்குப்
பாசியோடு, அரவு - பாம்பு. அசைத்தீரே - இடுப்பிற் கட்டியுள்ளீர்,