பதிக வரலாறு:
திருநல்லத்தையும்
திருவழுந்தூர் மாடக்கோயிலையும் வழிபட்டதற்கு
இடைக்காலத்தில் பணிந்த சிவதலங்கள் பலவுள் ஒன்றாகும் திருச்சிறு
குடியில் அருளியது இத் திருப்பதிகம்.
திருமுக்கால்
பண்:
சாதாரி
ப.தொ.எண்:
355 |
|
பதிக
எண்: 97 |
திருச்சிற்றம்பலம்
3842.
|
திடமலி
மதிளணி சிறுகுடி மேவிய |
|
படமலி
யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே.
1 |
3843.
|
சிற்றிடை
யுடன்மகிழ் சிறுகுடி மேவிய |
|
சுற்றிய
சடைமுடி யீரே
சுற்றிய சடைமுடி யீரும தொழுகழல்
உற்றவ ருறுபிணி யிலரே. 2 |
1.
பொ-ரை: வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, படமெடுக்கும்
பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை
அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர்.
கு-ரை:
திடம் மலி - வலிமைமிக்க. மதிள் - மதில். ல, ள ஒற்றுமை.
படம் மலி - படத்தையுடைய, உம்மைப் பணிபவர் அடைவது, அமர் உலகு
அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய சிவலோகமாம். உரையிலடங்காப்
பெருமையது ஆகலின் அது என்று சுட்டளவோடு நிறுத்தப்பட்டது.
2.
பொ-ரை: குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக்
கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்
|