3844. |
தெள்ளிய
புனலணி சிறுகுடி மேவிய |
|
துள்ளிய
மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநல முறுமே. 3 |
3845. |
செந்நெல
வயலணி சிறுகுடி மேவிய |
|
ஒன்னலர்
புரமெரித் தீரே
ஒன்னலர் புரமெரித் தீருமை யுள்குவார்
சொன்னல முடையவர் தொண்டே. 4 |
தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய
சிவபெருமானே! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது
வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை.
கு-ரை:
சிறு இடை - சிற்றிடையை யுடைய உமாதேவியாரோடு
மகிழ்ந்து சிறுகுடியில் இருக்கும் சடைமுடியீரே. கழல் உற்றவர் -
திருவடியைப் பற்றுக்கோடாகக் கொண்டவர். உறு - தம்மைப் பற்றியுற்ற.
பிணி - பாசபந்தம், இலர்.
3.
பொ-ரை: தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, துள்ளிக் குதிக்கும் மானைக்
கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே! துள்ளிக் குதிக்கும் மானை உடைய
உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா
நலன்களையும் பெறுவர்.
கு-ரை:
தெள்ளிய - தெளிவான. துள்ளிய - துள்ளிக் குதிக்கும்.
மான் உடையீர் - மானை உடையீர், ஏந்தியுள்ளீர். இனி உடை என்பதற்கு
ஆடையென்றும் பொருள் உண்மையால், மான் தோலை அணிந்தருளினீர்
எனலுமாம். புள்ளியுழை மானின் தோலான் கண்டாய் (தி.6.ப.23.பா.4.)
என்ற திருத்தாண்டகத்தாலும் அறிக. உள்ளுதல் செய - நினைக்க.
4.
பொ-ரை: செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நம்மோடு சேராது
பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே!
திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே
திருத்தொண்டர்கள் ஆவர். (உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு
பதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர்).
|