பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)97. திருச்சிறுகுடி1151

3850. செருவரை வயலமர் சிறுகுடி மேவிய
  இருவர யசைவுசெய் தீரே
இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
அருவிணை யொடுதுய ரிலரே.               9

3851. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
  புத்தரோ டமண்புறத் தீரே


கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே! அவ்வாறு இராவணனின்
வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழி
படுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும். அது உம்மை
வழிபட்டதன் பலனாகும்.

     கு-ரை: தசம் - பத்து, உரம் - வலிமை. சார்பவர் - பற்றுக் கோடாக
அடைபவர். வசையறும் அது - குற்றம் அற்றதாகிய வழிபாடே வழிபாடெனப்
படுவதாம். என் போல்பவர் பறித்திட்ட முகையும் அரும்பும் எல்லாம்
அம்போதெனக் கொள்ளும் ஐயன் தன்னடியார் குற்றங்கள் நீக்கிக்
குணங்கொண்டு கோதாட்டுந்தன்மையால் வழிபாடு வசையற்றதாயிற்று.

     9. பொ-ரை: வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு கொண்ட திருமால், பிரமன்
இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய
உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன்
விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர்.

     கு-ரை: இருவரை - பிரம விட்டுணுக்களை. இருவர் தொகைக் குறிப்பு.
அசைவு - வருத்தம். அருவினை என்பது ஆகாமிய சஞ்சித கன்மங்களை
துயர் என்றது பிராரத்த வினையை. அதனையிலர் என்றது, “சிவனும் இவன்
செய்தியெலாம் என் செய்தியென்றும் செய்ததெனக் கிவனக்குச் செய்த
தென்றும்” கொள்வன் ஆகையினால். (சித்தியார் சூ.10.1).

     10. பொ-ரை: வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப் புறம்பாக
இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான