|
புத்தரொ
டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடியப் பரிசே. 10 |
3852. |
தேனமர்
பொழிலணி சிறுகுடி மேவிய |
|
மானமர்
கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திய
ஞானசம் பந்தன தமிழே. 11 |
திருச்சிற்றம்பலம்
உம்மைப்போற்றி
வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர்.
கு-ரை:
செய்த்தலை - வயல்களினிடத்து. புனல் - நீர். அணி - அழகு
செய்கின்ற. சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டுரி. உம்மைப் போற்றுதலே
பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர். பரிசு - பேறு. கூடும்
அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
(தி.12 திருக்கூட்டச்சிறப்பு.8) என்றதும் நோக்குக.
11.
பொ-ரை: வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய
திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, மான்
ஏந்திய கரமுடைய சிவபெருமானே! மான் ஏந்திய கரமுடைய உம்மை
வாழ்த்திப் போற்றி ஞானசம்பந்தனின் இத்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள்
இம்மை, மறுமைப் பலன்களைப் பெறுவர்.
கு-ரை:
தேன் அமர் - வண்டுகள் விரும்பும், பொழில், மான் அமர் -
மான் தங்கிய, உம்மைப் பரவிய ஞானசம்பந்தன் தமிழே
(தனைப்பாடவல்லவர்க்கு அனைத்தும் நல்கும்) என்பது குறிப்பெச்சம்.
|