| பதிக வரலாறு;  வெங்குருவேந்தனார் 
        திருவீழிமிழலையிலிருந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம்.
 திருமுக்கால் 
        பண்: 
        சாதாரி
  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3853. | வெண்மதி 
            தவழ்மதில் மிழலையு ளீர்சடை |   
          |  | ஒண்மதி 
            யணியுடை யீரே ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர்
 கண்மதி மிகுவது கடனே.                   1
 |  
      பொ-ரை: 
        விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், சடையில் ஒளி பொருந்திய சந்திரனை
 அணிந்துள்ளவருமான சிவபெருமானே! ஒளி பொருந்திய சந்திரனை
 அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள்
 சிவஞானம் பெறுவர்.
       கு-ரை: 
        வெணி மதி - வானில் ஊரும் மதி. சடை மதி - சடையில் தங்கும் மதி. மதிள் - மதில். ளகரலகர ஒற்றுமை: போலி என்னலாகாது;
 சாம்பர் என்பதில் ஈற்றெழுத்து உரியதன்று; லகரனே உரியது ஆகலின்
 ரகரம் போலி. ஒற்றுமை அங்ஙனமன்றி மஞ்சள், மஞ்சல், மங்களம் மங்கலம்
 என ஈரெழுத்தும் உரியவாய் வருவது. மதியைச் சடையில் அணியாக
 உடையார். அணி - ஆபரணம். கண் - (உமது திருவடிப் பேற்றையே
 குறிக்கோளாகக்) கருதும். மதி - புத்தி. மிகுவது - அதிகரிப்பதும். அவர்க்கு
 இயல்பாய் எய்திடக் கூடிய தன்மையாம். கண்மதி - வினைத்தொகை.
 கண்ணுதல் இப்பொருளாதலை விண்ணினார்கள் விரும்பப்படுபவன்,
 கண்ணினார் கடம்பூர்க்கரக்கோயிலே என்னுந் திருக்குறுந்தொகையால்
 அறிக. உணர்பவர் - உம்மையே பதிப்பொருளாக உணர்பவர். கடன் -
 இயல்பு மாலறியாக் கடனாம் உருவத்தரன் என்ற திருக்கோவையாரால்
 அறிக.
 |