பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)100. திருத் தோணிபுரம்1165

3873. கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க்
       கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும்
     பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென்
     சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத்
     தோணி புரந்தானே.                   2


கொண்டு நின்றலாலுலகு நீங்கி நின்றனனென்று மோரார்” என்ற சாத்திரக்
கருத்துமாம். (சிவஞானசித்தியார் சுபக்கம் சூத். 1.49,51) கள்வர் கொள்வது
இராக்காலமும் பெயர்பொருளு மாயிருக்க, இவர் கொண்டது பெரும்பகலில்,
பெயராப்பொருளை. இது வியப்பு என்னும் குறிப்புத் தோன்றப் பெரும்பகலே
வந்தென் பெண்மை கொண்டு என்றார். போர்த்துக்கொண்டார் என்றார்.
கொண்டு பேர்த்தார் விகுதி பிரித்து மாறிக் கூட்டுக; கொண்டார் - கைக்
கொண்டார். இது தலைவி கூற்று. செம்மை - அறம்மிக்க (தோணிபுரம்),
சிறிது புண்ணியம் செய்யினும் பெரும்பயம் தரும் தல விசேடம். “எண்மைத்
தாய தொழில்சற் றியற்றினும் வண்மைத்தாக வரும்பய னுய்ப்பது”
(பேரூர்ப்புராணம் - மருதவரைப்படலம்.6.) செம்மை - செம்பொருள்
ஆகுபெயர். இது இப்பொருள்தரலைச் “செம்பொருள் கண்டார்” (குறள்.91)
என்ற பரிமேலழகர் உரைத்த உரையாலறிக.

     2.பொ-ரை:இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும்,
கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத்
தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற
வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில்
புகுந்து என் வநையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப்
பொலிவினைக் கெடுத்து வீற்றுருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள்
சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கொங்கு இயல் - (இயற்கையாகவே) வாசனை பொருத்திய.
பூகுழல் - பொலிவுபெற்ற கூந்தவையும். கொவ்வைச் செவ்வாய - கொவ்வைக்
கனிபோன்ற சிவந்த வாயையுமுடைய. கோமளம் மாது - மென்மைத் தன்மை
பொருந்திய உமையாள். பங்கு