பதிக வரலாறு:
திருத்தலைச்சங்காடு
சேர்ந்து, அங்கிருந்த அந்தணர்கள் எல்லாரும்
விதிப்படி வழிபட்டு எதிர்கொள்ளச்சென்று, நற்சங்கத்தின் தருமுறை நெறியில்
அக்கோயிலை வணங்கிய வாய்மையைப் பாடி, மறையவர் போற்றவந்து,
திருவலம்புரத்து இறைவரைத் தொழுது ஏத்திப் பாடியருளியது இத்
திருப்பதிகம். (தலைச்சங்காடு தலைச்சங்கை என்பன மருஉ. தலைச்சங்காடு
என்பதே உரிய பெயர்.)
பண்:
பழம்பஞ்சுரம்
ப.தொ.எண்:
361 |
|
பதிக
எண்:103் |
திருச்சிற்றம்பலம
3901. |
கொடியுடை
மும்மதி லூடுருவக் |
|
குனிவெஞ்
சிலைதாங்கி
இடிபட வெய்த வமரர்பிரா
னடியா ரிசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத்
துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே. 1 |
1.
பொ-ரை: கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச்
செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி, பேரொலியுடன்
அம்மதில் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான்,
அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்ற குறுகிய
இடையுடைய உமாதேவியைப் பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக்
கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே
படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும்.
கு-ரை:கொடி
- துவசம். இடிபடி - பேரொலி கிளம்ப (எய்த பிரான்).
துடி - உடுக்கை. துதைந்தார் - பிரிவிலா ஓருடம்பாகக் கொண்டவர்.
போலும் உரையசை. "ஒப்பில்போலி" என்பர்
|