3953. |
பூமக
னும்மவ னைப்பயந்த |
|
ஆமள வுந்திரிந்
தேத்திக்காண்ட
லறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்களீண்டிப்
பலவும் பணிசெய்யும்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த
திருநாரை யூர்தானே. 9 |
3954. |
வெற்றரை
யாகிய வேடங்காட்டித் |
|
திரிவார்
துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை
யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான்
குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு
நாரை யூர்சேர்வே. 10 |
கு-ரை:
கூசம் - கூசுதல் (அம் - தொழிற்பெயர் விகுதி). இற - ஒழிய.
கரவாதார் - வஞ்சமற்ற அடியார்கள்.
9.
பொ-ரை: தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப்
பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற
அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கி
சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண,
நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும்,
தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
பூமகனும் - பிரமனும். அவனைப் பயந்த - அவனைப் பெற்ற.
புயலார் நிறத்தான் - மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால். நாசமதாகி
இற - அழிந்து ஒழிய. அடர்ந்த - நெருக்கிய. ஆம் அளவும் - தம்மால்
இயன்றவரை முற்றிலும். பாமருவும் குணத்தோர் - நீதி நூல்களில் சொல்லிய
நற்குண நற்செய்கை உடையவர்கள். ஈண்டி - கூடி.
10.
பொ-ரை: ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும்,
|