3955. |
பாடிய
லுந்திரை சூழ்புகலித் |
|
திருஞான
சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத்
திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும்
பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு
மவலக் கடல்தானே. 11 |
திருச்சிற்றம்பலம்
மஞ்சட் காவியாடை
போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற
சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலை
வரும், இளமையானவரும், அடியவர்கட்கு அருள்புரியும்
தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து,
வழிபட்டு உய்வீர்களாக.
கு-ரை:
வெற்றரையாகிய வேடம் - நிர்வாணக்கோலம். காட்டித்
திரிபவர் சமணர். துவர் ஆடை உற்ற அரையோர்கள் - புத்தர்கள். உற்றரை
- உற்ற + அரை, பெயரெச்ச விகுதி அகரம் தொக்கது. (தொழில் ஆரப்
பெற்று) அரவு ஆட்டிவரும் பெருமான் என்பது பச்சைத்தாள் அரவாட்டீ
என்ற திருவாசகத்திலும்(தி.8) வருவது. சிவபெருமான் பாம்பை ஆட்டிவரும்
தன்மை தன் அடியார் அஞ்சத் தக்க வினைகளைப்போக்கும்
தொழிலையுடையவன் தானேயென்பது அறிவித்தற்கு. அக்கருத்தே தொழில்
ஆரப்பெற்றும் என்பதாற் குறித்த பொருளாம். தொழில் - தான்
அடியார்க்குச் செய்யும் அருள். ஆரப் பெற்று - அதை நிறைவேற்றி.
11.
பொ-ரை: அலைஓசையுடைய கடல்சூழ்ந்த சீகாழியில் அவதரித்த
திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும்,
சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப் பாடல்களாலாகிய
இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய
அடியார்களின் கடல்போன்ற பெருந்துன்பம் நீங்கும்.
கு-ரை:
பாடுஇயலும் - ஓசை உடைய. திரைசூழ் - கடல் சூழ்ந்த.
சேடு இயலும் - பெருமை பொருந்திய.
|