பக்கம் எண் :

1232திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3957. வைதி கத்தின் வழியொழு காதவக்
  கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
மைதி கழ்தரு மாமணி கண்டனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        2

3958. மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
  பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே
     ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
     ஆல வாயி லுறையுமெம் மாதியே.        3


அவன் திருவுள்ளத்திற்கு ஏற்குமா? என்பதை உணர்த்த “வாதில்
வென்றழிக்கத் திருவுள்ளமே” என்று வினவுகிறார். ஆயினும் சைவ நன்னெறி
பரவுதல் இன்றியமையாமையின் ஞால நின்புகழே மிக வேண்டும் என
வற்புறுத்தியும் வேண்டுகிறார். ஆதி - சிவபெருமானுக்குரிய பெயர்.

     2. பொ-ரை: கருநீலமணி போன்ற கண்டத்தையுடைய சிவபெருமானே!
வேதநெறிகளைப் பின்பற்றி ஒழுகாத வஞ்சனையையுடைய கரிய
சமணர்களையும், புத்தர்களையும் கூட்டி வாது செய்து வெல்ல
விரும்புகின்றேன். உமது திருவுள்ளம் யாது? தென் ஆலவாயில்
வீற்றிருந்தருளும் எம் முதல்வரே! உலகனைத்தும் உம் புகழே மிக
வேண்டும். திருவருள்புரிவீராக!

     கு-ரை: வைதிகம் - வேதத்திற் சொல்லும் நெறி. கைதவம் -
வஞ்சனை.காரமண் - நெற்றியில் நீறு பூசாமையாலும், நீராடாமையாலும், ஒளி
குன்றிய தன்மையாலும் காரமண் எனப்பட்டனர். எய்தி - நின்று.

     3. பொ-ரை: மான்கன்றையும், மழுவையும் கைகளில் ஏந்தியுள்ள
சிவபெருமானே! வேத நெறிப்படி ஒழுகாத கொடிய பாவிகளாகிய, கையினால்
முடி பறிக்கப்பட்ட தலையோடு பாயை உடுத்தித் திரியும் சமணர்கள்
தோல்வியுறும்படி அவர்களோடு வாது செய்ய உமது திருவுளம் யாது? தென்
ஆலவாயில் வீற்றிருந்தருளும்