3980. |
அகலமார்தரைப்
புகலுநான் மறைக் |
|
கிகலியோர்கள்வாழ்
புகலிமாநகர்ப்
பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர
னகிலநா யகனே. 3 |
3981. |
துங்கமாகரி
பங்கமாவடுஞ் |
|
செங்கையானிகழ்
வெங்குருத்திகழ் |
காணும்படி அமைந்த,
நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில்
வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி
வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர்.
கு-ரை:
சேண் உலாம் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில். வேணு
- விண்ணுளோர் இறங்குவதற்கு வைத்த மூங்கிலால் செய்த ஏணியைப்
போல். மண்ணுளோர் காண - பூவுலகில் உள்ளோர் காணும்படி (பொருந்திய).
மன்றல் ஆர் - வாசனை மிகுந்த. வேணுபுரத்தில் எழுந்தருளிய
சிவபெருமானின் திருவடிகளைப் பாராட்டிப் போற்றுபவர் யாவரும்
சிறந்தவராவர் என்பர் பிற்பகுதியின் பொழிப்பு. பொருந்திய என ஒரு சொல்
வருவிக்க. தாணு - சிவபெருமான். ஆணி - உரையாணிப்பொன்.
3.பொ-ரை:
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்
புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும், சூரியனுக்கு
எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான
சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார்.
கு-ரை:
அகலம் ஆர் - இடம் அகன்ற. தரை - பூமியிலுள்ளாரால்.
புகலும் - சிறப்பித்துச் சொல்லப் பெறுகின்ற. நான்மறைக்கு இகலியோர் -
நான்கு வேதங்களிலும் வாதிட்டு வென்றவர். பகல் செய்வோன் -
சூரியனுக்கு. எதிர் - எதிராகிய. சகலன் - கலையோடு கூடியவனாகிய
சந்திரனை. சேகரன் - முடியில் அணிந்த சிவபெருமான்.
4.பொ-ரை:
உயர்ந்ததும், பெரியதுமான யானை துன்புறும்படி
கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும்,
|