பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)110. திருப்பிரமபுரம்1245

110. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

     தாளம் பெற்ற சண்பைக் கோமான், திருத்தோணிமிசை மேவினார்
திருமுன்பு தாழ்ந்தெழுந்து நின்று பாடிய தமிழ் வேதத்துள் ஒன்று
இத்திருப்பதிகம்.

ஈரடி
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 368 பதிகஎண்: 110

திருச்சிற்றம்பலம்

3978. வரமதேகொளா வுரமதேசெயும்
       புரமெரித்தவன் பிரமநற்புரத்
தரனனாமமே பரவுவார்கள்சீர்
     விரவுநீள் புவியே.                     1

3979. சேணுலாமதில் வேணுமண்ணுளோர்
       காணமன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவ
     ராணியொத் தவரே.                    2


     1.பொ-ரை: தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில்
பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த
அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப்பிரமபுரம்
என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி
வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும்.

     கு-ரை: வரம் அதே கொளா - வரம் பெற்ற பயனை அடையாமல்,
உரம் அதே செயும் - தங்கள் வலிமைக்குரிய தீங்கையே செய்த, திரி
புரங்களை எரித்தவனாகிய பிரமபுரத்திலுள்ள சிவபெருமானின் புகழையே
துதித்துப் போற்றும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமிமுழுதும்
பரவும் என்பது இப் பாட்டின் பொழிப்பு. 2.பொ-ரை: ஆகாயத்தை அளாவிய
மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என
மண்ணுலகத்தவர்