சொன்னபோதிலும்,
ஒவ்வொரு பாசுரமும் ஆனைக்காவே என்று முடிகின்றது. முதல் எட்டுப் பாடல்கள், ஆரூர்
ஆதி (ஆனைக்கா) என்றே முடிகின்றன. ஒன்பதாவது பாடல் ஆரூர் எந்தை என்று முடிகின்றது.
பத்தாவது பாடல் கயிலையோன் ஆனைக்கா என்று முடிகிறது. பதினோராவது பாடல் இந்நான்கு
தலங்களிலும் எழுந்தருளியிருப்பவனது திருவானைக்காவை ஞானசம்பந்தன் பாடிய தமிழ் என்று
வருகிறது.
திருஞானசம்பந்தர்
புராணம்
நாரணன்
நான்முகன் காணா உண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை செல்வத்
திருவாரூர் மேய பண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை ஆனைக்கா
வின்கட் புகழ்ந்து பாடி
ஏரணி யும்பொழில் சூழ்ந்த சண்பை
ஏந்தலார் எல்லையில் இன்ப முற்றார்.
-
சேக்கிழார்.
|
|