பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)119. திருவீழிமிழலை1331

4089. வேந்தர்வந் திறைஞ்ச வேதியர் வீழி
       மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற
     வீசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன்
     றூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
     வானவர் வழிபடு வாரே.               11


திருச்சிற்றம்பலம் உதிருமாறு அவற்றின் உயர்ந்த கமுகின் பழக்குலை விழ
அவற்றினும் உயர்ந்த தென்னைமரங்களின் உச்சியில் மேகம் படியும்
சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்பது பின்னிரண்டடிகளின் கருத்து.

     11. பொ-ரை: இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட,
வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும்
திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இறைவனான எங்கள் சிவபெருமானை, நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில்
அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன், போற்றி உரைத்த
இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள்.

     கு-ரை: தேவியோடுறைகின்ற ஈசனை - இறைவன் இங்குத் திருமணக்
கோலத்தோடு வீற்றிருந்தருளும் தன்மை கூறப்படுகின்றது. ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி பதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் கோன்
பயந்த மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள் நீதியைப் பிரமா
புரநகர் மன்னனை என்னுடைய கதியைக் கருதவல் லோர்அம ராவதி
காப்பவரே. - நம்பியாண்டார் நமபி. s