பதிக வரலாறு:
திருவாலவாய்
இது என்று அடியார் காட்டக்கண்டு அறிந்த சண்பை
அண்ணலார், துணைக்கைமலர் குவித்து, பேரன்பால் பண் இசை பாடிப்
பணிந்து, மங்கையர்க்கரசி என்று எடுத்து, குலச்சிறையார்பணியும்
சிறப்பித்து, எண்டிசை பரவும் ஆலவாயாவது இதுவே என்று பாடியது
இந்நற்பதிகம்.
பண்:
புறநீர்மை
ப.தொ.எண்:
378 |
|
பதிக
எண்: 120 |
திருச்சிற்றம்பலம்
4090. |
மங்கையர்க்
கரசி வளவர்கோன் பாவை |
|
வரிவளைக்
கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே. 1 |
1.
பொ-ரை: மங்கையர்க்கரசியார் சோழ மன்னரின் புதல்வி.
கைகளில் வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய
மடம் என்னும் பண்புக்குரிய பெருமையுடையவர். தாமரை மலரில்
வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டிய மன்னனின் பட்டத்தரசி.
சிவத்தொண்டு செய்து நாள்தோறும் சிவபெருமானைப் போற்றி வழிபடும்
தன்மையுடையவர். அச்சிவபெருமான் ஓங்கி எரியும் நெருப்புப் போன்று
சிவந்த வண்ணமுடைய தூய உருவினர். உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு
வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர்.
அப்பெருமான் அங்கயற்கண்ணி உடனாக வீற்றிருந்தருளும் திருஆலவாய்
என்னும் திருத்தலம் இதுவே யாகும்.
கு-ரை:
வரிவளக்கைமடமானி - வரிகளையுடைய வளையல்களை
அணிந்த. இளமைவாய்ந்தமானி - மானாபரணரென்று
|