பதிக வரலாறு:
சேதுவின்கண்
செங்கண்மால் பூசைசெய்த சிவபெருமானைப் பாடிப்
பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும்
ஈழத்தில் மன்னு திருக்கோணமலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை
வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்:
புறநீர்மை
ப.தொ.எண்:
381 |
|
பதிக
எண்: 123 |
திருச்சிற்றம்பலம்
4121. |
நிரைகழ
லரவஞ் சிலம்பொலி யலம்பு |
|
நிமலர்நீ
றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு
மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே. 1 |
1.
பொ-ரை: சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத்
திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே
பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு
பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும்,
கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர,
ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண
மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
கரைகெழுசந்து - கரையில் ஒதுக்கப்பட்ட சந்தன மரங்கள்.
கார் அகில் பிளவு - கரிய அகில் கட்டை. வரன்றி - வாரி. ஓதம் - அலை.
ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை:- இடத்து நிகழ்பொருளின்
தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.
|