பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)123. திருக்கோணமலை1355

4122. கடிதென வந்த கரிதனை யுரித்து
       அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
     பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
     கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
     கோணமா மலையமர்ந் தாரே.           2

4123. பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
       படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
     மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந்
     தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
     கோணமா மலையமர்ந் தாரே.           3


     2. பொ-ரை: விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை
உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர்
பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை
அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை ஒரு
பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய
ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க
திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கொடிது என - (கோட்டோர்) கொடிது என்று கூறும் படியாக.

     3. பொ-ரை: சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும்,
பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில்
அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச்
சிவபெருமான் ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக்
கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக்