பக்கம் எண் :

1364திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4133. அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
  நடைமட மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.         3

4134. வளங்கிளர் கங்கை மடவர லோடு
  களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.      4


ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய
கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு
ஆடுகின்றீர்.

     கு-ரை: அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை விரும்பினீர்.

     3. பொ-ரை: திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை
அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று
நகரங்களையும் எரித்தீர். அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை
ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர். எருதின்மீது விருப்பத்துடன்
ஏறுகின்றீர்.

     கு-ரை: அடையலர் - பகைவர்; நகர்மூன்று - திரிபுரம்.

     4. பொ-ரை: குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம்
பெருமானே! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு
அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர்.

     கு-ரை: வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள் அதிகரித்தற்குக்
காரணமாகிய கங்கை. அரங்கு ஆக - காடு அரங்கு களம் ஆகப் பட
ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக் கொண்டு ஆடுதிர் எனப்
பொருள் கூறுக.