| 
         
          |          
              124. திருக்குருகாவூர் வெள்ளடை |  பதிக வரலாறு: 
               தேசம்போற்றும் 
        நேசராய சண்பையர் கோமகனார், வாசம் செய்யும் பொழில் சூழும் குருகாவூரை இன்புற இறைஞ்சிப் பாடியருளியது
 இத்தமிழ்ச்சொல்மாலை.
 பண்: 
        அந்தாளிக் குறிஞ்சி 
         
          | ப.தொ.எண்: 
            382 |  | பதிக 
            எண்: 124 |  திருச்சிற்றம்பலம் 
          
         
          | 4131. | சுண்ணவெண் 
            ணீறணி மார்பில் தோல்புனைந் |   
          |  | தெண்ணரும் 
            பல்கண மேத்தநின் றாடுவர் விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
 பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.        1
 |  
       
         
          | 4132. | திரைபுல்கு 
            கங்கை திகழ்சடை வைத்து |   
          |  | வரைமக 
            ளோடுட னாடுதிர் மல்கு விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
 அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே.            2
 |  
      1. 
        பொ-ரை: சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய
 பல கணங்களும் போற்ற நடனம் செய்வார். அத்தகைய சிவபெருமான்
 தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில்
 வெள்ளடை என்னும் கோயிலில், உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு
 விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர்.
      கு-ரை: 
        பதினெண்கணம், பூதகணம், பேய்க்கணம், முனிகணம் உருத்திரபல்கணம் என இவையொவ்வொன்றிலும் பல ஆதலின் எண்ணரும்
 பல்கணம் என்றார்.
       2. 
        பொ-ரை: நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில்
 வீற்றிருந்தருளுகின்ற பெருமானே! இடுப்பில் விளங்கும்
 |